குழந்தை காலணி பகுதியில் துணை மேயர் ஆய்வு
மழைநீர் தேங்கி இருந்த இடங்களை ஆய்வு செய்தார் துணைமேயர்;
Update: 2023-12-03 03:15 GMT
குழந்தை காலணி பகுதியில் துணை மேயர் ஆய்வு
கடலூர் மாநகராட்சி குழந்தை காலனி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து மழையின் காரணமாக மழைநீர் வடியாமல் தேங்கி நின்று கொண்டு இருந்தது. இதனால் நோய்கள் பரவக்கூடிய வாய்ப்புகள் இருந்தது. இந்த நிலையில் இந்த இடத்தை கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக இந்த தண்ணீரை அப்புறப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்தார். உடன் ஊர் பொதுமக்கள் மற்றும் விசிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.