ஆதரவற்ற பெண் உடல் அடக்கம்
ஆதரவற்ற பெண் உடலை தாமாக முன்வந்து அடக்கம் செய்த காவல்துறையினர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-26 06:38 GMT
ஆதரவற்ற பெண் உடல் அடக்கம்
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த லட்சுமி உடல் நலக்குறைவால் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் இறந்தார். இதுவரை யாரும் உரிமை கோரப்படாத நிலையில் முக்கூடல் உதவி ஆய்வாளர்கள் முருகன் மற்றும் காவலர்கள் தாமாக முன்வந்து பிரேத பரிசோதனை செய்து, வடக்கு அரியநாயகிபுரம் பகுதியில் உடலை இன்று நல்லடக்கம் செய்தார்கள். போலீசாரின் இந்த சமூக பணியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.