1000 லிட்டர் சாராயம் அழிப்பு - கள்ளக்குறிச்சி காவல்துறையினர் அதிரடி

தீவிர மதுவிலக்கு சோதனையில் கள்ளக்குறிச்சி காவல்துறையினர் 1000 லிட்டர் சாராயம் அழிப்பு.

Update: 2024-03-08 05:04 GMT

சாராயம் அழிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா உத்தரவின் பெயரில் உதவி ஆய்வாளர் பிரதீப்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று கல்வராயன்மலை பகுதியில் தனிப்படையினர் சோதனையில் ஈடுபட்டபோது மணப்பாட்சி கிராமம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 05 பேரலில் சுமார் 1,000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் மற்றும் ஒரு லாரி ட்யூபில் 30 லிட்டர் சாராயம் ஆகியவற்றை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் இக்குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News