அரசு பள்ளியில் தேன்கூடுகள் அழிப்பு
கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 500க்கும் மேற்பட்டமாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் சமையல் கூடம் அருகேயுள்ள புளியமரத்தில் ராட்சத தேனீக்கள் கூடுகட்டி இருந்தது. இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்திடம் பெற்றோர்கள் புகார் அளித்தும், விஷ தேனீக்களை அழிக்காமல் இருந்தனர். இந்நிலையில் ஆத்தூர் ஆர்டிஓ ரமேஷ் உடனடியாக, பள்ளியில் உள்ள தேன் கூடுகளை அழிக்க உத்தரவிட்டார். அதன்பேரில், கெங்கவல்லி தாசில்தார் பாலாஜி, சம்மந்தப்பட்ட கெங்கவல்லி தீயணைப்புத் துறைக்கு புகார் அளித்தனர். இதையடுத்து நிலைய அலுவலர் (பொ) செல்ல பாண்டியன், வேலுமணி தலைமையில், தீயணைப்புத்துறை வீரர்கள் தண்ணீரை பீச்சியடித்து தேன் கூடுகளை அழித்தனர்.