வளர்ச்சி திட்ட பணிகளை வரைந்து முடிக்க வேண்டும் : எம்பி பழநி மாணிக்கம் அறிவுறுத்தல்
வளர்ச்சி திட்ட பணிகளை வரைந்து முடிக்க வேண்டும் என எம்பி பழநி மாணிக்கம் அறிவுறுத்தியுள்ளார்.
மக்களுக்கான திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தஞ்சாவூர் எம்.பி. எஸ்.எஸ்.பழநி மாணிக்கம் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண் காணிப்புக் குழு கூட்டம், குழுத் தலைவரும் எம்.பி.யுமான எஸ்.எஸ். பழநிமாணிக்கம் தலைமையில் நேற்று நடைபெற் றது. ஆட்சியர் தீபக் ஜேக்கப் முன்னிலை வகித்தார்.
இதில், எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் பேசியது: தஞ்சாவூர் மாவட் டத்தில் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் வளர்ச் சிப் பணிகள் குறித்து கண்காணிக் கும் பொருட்டு, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டது.
இதில், மத்திய, மாநில அரசுகளின் சார்பில் ஒவ்வொரு துறை சார்பில் கொண்டு வரப் பட்டுள்ள திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் களத்துக்கு சென்று பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பணிகளையும் விரைவாகவும் தரமாகவும் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தெரி வித்தார்.
கூட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் டி.கே.ஜி.நீலமேகம், என்.அசோக்குமார், மாநகராட்சி மேயர்கள் சண்.ராமநாதன், கே.சரவணன், கூடுதல் ஆட்சியர் எச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சை துணைமேயர் அஞ்சு கம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.