சிவலிங்க திரூமேனியிலிருந்து  தண்ணீர் வடிவதால் பக்தர்கள் பரவசம் 

தரங்கம்பாடி அருகே சிவலிங்கத்திலிருந்து  தண்ணீர் கசிந்து வருவதைக் கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்து வழிபாடு

Update: 2023-12-06 03:25 GMT

சிவலிங்கத் திருமேனியில் இருந்து  தண்ணீர் வருவதால் பக்தர்கள் பரவசம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி  மடப்புரம் ,மண்மலை கிராமத்தில், மங்கல நாயகி சமேத மண்மலைநாதர் கோவில் உள்ளது. மண்மலை கிராமத்தில் உள்ள ,குளத்தில் இருந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட, சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்படாமல் குளக்கரையில், கேட்பாரற்று கிடந்தது.மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், சிறிய கோவில் அமைத்து, சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். இன்று  சிவலிங்கத்தின் மீது உடுத்தப்பட்டிருந்த ஆடை நனைந்த மேனிக்கு இருந்ததைக் கண்டு வியந்தனர். மாற்று உடை அணிவிக்க முற்பட்டபோது சிவலிங்கத்திலிருந்து  தண்ணீர் கசிந்து,வருவதைக் கண்ட  பக்தர்கள், ஆச்சர்யப்பட்டனர். வாட்ஸ்அப்பில் மூலம் ,சிவலிங்கத்தில் தண்ணீர் வடியும் நிகழ்வு சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News