சீரடி சாய்பாபா ஆலயத்தில் 5001 விளக்குகள் ஏற்றி பக்தர்கள் வழிபாடு

Update: 2023-12-15 06:09 GMT

விளக்கு ஏற்றி வழிபாடு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திண்டுக்கல் நாகல் நகர் பாரதிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் சிறப்பு பூஜை நடந்தது.இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் தீப வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கோவிலின் பத்தாம் ஆண்டை முன்னிட்டு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், உலக மக்கள் இயற்கை சீற்றத்தில் இருந்து விடுபட இறைவழிபாட்டினை வலியுறுத்தியும் 5001 தீப வழிபாடு நடந்தது. பொதுமக்கள்,குழந்தைகள் உட்பட தங்களது திருக்கரங்களால் நட்சத்திரம் ஓம் சாய்பாபாவின் உருவம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் 5001 விளக்குகளில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு நடத்தினர். முன்னதாக சாய்பாபாவிற்கு சிறப்பு அலங்காரம் செய்து பகத்தர்கள் ஆராதனை நடைபெற்றது.



Tags:    

Similar News