தீ குண்டத்தில் குதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

குத்தாலம் அருகே ஸ்ரீ ஐயன் பிடாரி அம்மன் கோவிலில் தீ குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

Update: 2024-05-09 06:45 GMT

குத்தாலம் அருகே ஸ்ரீ ஐயன் பிடாரி அம்மன் கோவிலில் தீ குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் இராஜகோபாலபுரத்தில் ஸ்ரீ ஐயன்-பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தீமிதி திருவிழா கடந்த 24ஆம் தேதி காப்பு கட்டுதளுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஐயன்-பிடாரியம்மன் வீதி உலா காட்சி, இளந்தேர் வீதி உலா காட்சி, நடைபெற்று விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக திருத்தேர்கள் வீதி உலா காட்சி நடைபெற்று. கங்கணம் கட்டி கொண்டு விரதமிருந்த பக்தர்கள் குத்தாலம் மெயின் ரோடு சாஸ்தா கோவிலில் இருந்து மேள வாத்தியங்கள், வான வேடிக்கைகள் முழங்க சுக்கு மாத்தடி ஏந்தி நடனமாடியவாறு கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த வினோத தீக்குண்டத்தில் குதித்து குதித்து இறங்கி தீமிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்திய நிகழ்வு காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிடாரி அம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ராஜகோபாலபுரம் விழா குழுவினர் மற்றும் கிராமவாசிகள் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News