தேவூர் செல்ல முத்து மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூர் செல்ல முத்து மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது 

Update: 2024-04-22 15:17 GMT

நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூர் செல்ல முத்து மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா இன்று இரவு நடைபெற்றது   தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த 14ம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது அதைத்தொடர்ந்து தினம்  தோறும் இரவு அம்பாள் வீதி உலா காட்சி நடைப்பெற்றது.

முக்கிய விழாவான தீமிதி திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. காப்பு கட்டிக் கொண்ட 1150 பக்தர்கள் பிடாரியம்மன் கோயில் குளத்தில் இருந்து காத்தவராயன் சுவாமியுடன் ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து கோயில் வாசலில் அமைக்கப் பட்டிருந்த தீக்குண்டத்தில் காப்பு கட்டி கொண்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றின் கொண்டனர்.

இதையத்து இன்று 23ம் தேதி இரவு செடில் உச்சவமும் நடைபெறுகிறது. வரும் மே 7ம் தேதி பெரியநாயகியம்மன் பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை விழா  குழுவினர் உபயதார்கள், கிராம வாசிகள் செய்திருந்தனர்

Tags:    

Similar News