தருமபுரி அருக வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்

தருமபுரி அருக வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில ஈ.;

Update: 2024-02-13 16:43 GMT

வருவாய்த்துறை அலுவலர்கள்

தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது. உண்ணா விரதத்திற்கு மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தர். பொன்ராஜ் வாழ்த்தி பேசினார்.

உண்ணா விரதப் போராட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் - தனி ஊதியம் வழங்க வேண்டும்.

இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர் இடையே ஒருங்கிணைந்த முதுநிலை நிர்ணயம் செய்வதில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலண்மைத்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடன் நிரப்பிட வேண்டும். அனைத்து வட்டங்களிலும் ச என்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வாட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும்.

Advertisement

அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மைப் பணிக்கென சிறப்பு பணியிடங்கள் மற்றும் பேரிடர் மேலண்மைப்பிரிவில் 31.03.2023 முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் உள்ள பயன்பாட்டிற்கு தகுதியற்ற ஈப்புகளை கழிவு செய்து அவற்றிற்கு ஈடாக புதிய ஈர்ப்புகளை உடனடியாக வழங்கிட வேண்டும். உங்கள் ஊரில் உங்களைத் தேடி,மக்களுடன் முதல்வர் மற்றும் மக்களின் முகவரி போன்ற அரசின் திட்டப் பணிகளில் பணி நெருக்கடி அளிக்கப்படுவதைத் தவிர்த்து திட்டப் பணிகளை செம்மையாக மேற்கொள்ள உரிய கால அவகாசம் மற்றும் நிதி ஒதிக்கீடு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், மாவட்ட துணை தலைவர் ராஜிவ்காந்தி, நாகவேணி, அன்பு, ராஜ்குமார், சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News