தர்மபுரி அருகே சூதாடிய நபர்கள் கைது - பணம், இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
பணம் வைத்து சூதாடியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.;
Update: 2024-02-20 11:49 GMT
சூதாட்டம் விளையாடியவர்கள் கைது
சூதாட்டம் விளையாடியவர்கள் கைது
தர்மபுரி சட்டமன்ற தொகுதி மற்றும் தர்மபுரி சுற்றுவட்டார பகுதிகளில் பி1 காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளமதி தலைமையிலான . காவலர்கள் கடகத்தூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது, பணம் வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் , குமார் , ராஜப்பன்,ராமர், உதய குமார், மாதேஷ் ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 1,290 பணம் மற்றும் 4 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் மதிகோண் பாளையம் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் மாரப்பன் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கொண்டல்பட்டி பகுதியில் சூதாடிய பிரான்சிஸ் என்பவரை கைது செய்தனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.