திருப்பத்தூரில் போலீசாரை கண்டித்து தர்ணா போராட்டம்

திருப்பத்தூரில் போலீசாரை கண்டித்து தர்ணா போராட்டம் நடைபெற்றது.;

Update: 2024-02-11 14:37 GMT

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

 திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு போலீசாரை கண்டித்து தர்ணா போராட்டம்! திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு அடுத்த மேலூர் கிராம பகுதியைச் சார்ந்த ஆட்டுக்கார துக்கன் மகன் பழனி மற்றும் அதே பகுதியைச் அண்ணாமலை மகன் அருணாச்சலம் ஆகிய இருவருக்கும் இரண்டரை ஏக்கர் அளவிலான நிலப் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

   இந்த நிலையில் இருவரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் தெரிகிறது இது குறித்து அருணாச்சலம் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் பழனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளதாகவும் தெரிகிறது.

Advertisement

  இந்த புகாரின் அடிப்படையில் இன்று விடியற்காலை 4.30 மணி அளவில் திருப்பத்தூர் கிராமிய உதவி காவல் ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் அவருடன் சென்ற போலீசார் பழனியை காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர்.

இதன் காரணமாக எந்த ஒரு முறையான தகவலும் கொடுக்காமல் பழனியை காவல் நிலையம் அழைத்து வந்ததன் காரணமாக இன்று அவருடைய உறவினர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த திருப்பத்தூர் நகர போலீசார் இந்த சம்பவம் குறித்து முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர் இதன் காரணமாக சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

Similar News