கருவிழி நோய் கண்டறியும் முகாம்

பெத்தநாடார்பட்டியில் கருவிழி நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

Update: 2024-06-17 11:41 GMT

பெத்தநாடார்பட்டியில் கருவிழி நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.


தென்காசி மாவட்டம் பெத்தநாடார்பட்டியில் அரவிந்த் கண் மருத்துவமனை பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண் தான விழிப்பு விழிப்புணர்வு குழு இணைந்து நடத்திய கருவிழி நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பெத்தநாடார் பட்டி தொழிலதிபர் கலைச் செல்வன் தலைமை தாங்கினார்.

பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர் குழு நிறுவனர் இளங்கோ, பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க செயலாளர் சசி ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவர் தேர்வு அருள் ஆனந்தன் வரவேற்புரை ஆற்றினார். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க செயலாளர் தேர்வு தங்கராஜ் தொகுப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியை அரிமா மாவட்ட ஆளுநர் பிரான்சிஸ் ரவி, அவருடைய துணைவியார் பிரமிளா ரவி துவக்கி வைத்தனர். 93 நோயாளிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. அரிமா மாவட்ட அமைச்சரவை செயலாளர் சுப்பையா, வட்டாரத் தலைவர் மதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அரவிந்த் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பெத்தநாடார் பட்டி பஞ்சாயத்து அலுவலர் கடல் மணி ஆகியோர் செய்தனர். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க பொருளாளர் சினேகா பாரதி நன்றி கூறினார்.

Tags:    

Similar News