தமிழ்நாடு வருவாய் சங்கத்தின் வைர விழா

தமிழ்நாடு வருவாய் சங்கத்தின் வைர விழா கீழக்கரையில் நடைபெற்றது

Update: 2023-11-01 10:47 GMT

வைர விழா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
இராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் இராமநாதபுரம் மாவட்ட மையத்தின் கீழக்கரை வட்டக்கிளை சார்பில் வைரவிழா ஆண்டு வட்டக்கிளை மாநாடு - 2023 மாவட்ட தலைவர் பழனிக்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் செல்லப்பா தனி வட்டாட்சியர் (நில எடுப்பு) மீனலோசினி வட்ட துணைத்தலைவர் சரவணக்குமார் துணை வட்டாட்சியர் பரமசிவன் வட்டக்கிளை செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டக்கிளை தலைவர் சந்திரன் துவக்க உரையாற்றினார். தனி வட்டாட்சியர் சேகு ஜலாலுதீன் வரவேற்புரையாற்றினார்.மாவட்ட துணைத்தலைவர்கள் மீனாட்சி சுந்தரம் வாழ்த்துரை வழங்கினார்.தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் சுந்தரமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சங்கத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சார்பாக பரமக்குடி ஆர் எஸ் மங்கலம் ஆகிய வட்ட கிளைகளுக்கு நிர்வாகிகள் நியமித்தனர்.கீழக்கரை வட்டக்கிளை சார்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது . கீழக்கரை அலுவலக உதவியாளர் சண்முகம் சிறப்பாக பணியாற்றியதை தொடந்து பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் கீழக்கரை கிராம உதவியாளர பாண்டி தமிழக முதல்வரிடம் நற்சான்று பெற்றதற்கான பாராட்டு விழா போன்றவை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கம் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் போன்றவற்றின் தலைவர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News