திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
அய்யங்கோவில்பட்டு திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
Update: 2024-06-25 10:26 GMT
விழுப்புரம் அருகே அய்யங்கோவில்பட்டு கிராமத் தில் மிகவும் பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தீமிதி திரு விழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. விழா வின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று மாலை நடந்தது.
இதையொட்டி கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, அம்மனுக்கு மகா தீபா ராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவில் சாமி திருவீதி உலா நடந்தது.