சரக்கு ரயிலில் வந்த 3500 டன் கோதுமை..!
ஆந்திராவில் இருந்து திண்டுக்கல், தேனிக்கு 3,500 டன் ரேஷன் கோதுமை வருகை.
Update: 2024-03-04 11:32 GMT
திண்டுக்கல், தேனி மாவட்டத்துக்கு வழங்குவதற்காக ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 3,500 டன் ரேஷன் கோதுமை கொண்டுவரப்பட்டது.
ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் கோதுமை சாகுபடி அதிக அளவில் நடக்கிறது. இந்த மாநிலங்களில் சாகுபடியாகும் கோதுமை சரக்கு ரெயில்கள் மூலம் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கும் இங்கிருந்தே கோதுமை கொண்டு செல்லப்பட்டு அந்தந்த மாவட்ட பகுதிகளில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் சேமித்து வைக்கப்படும்.
அந்த வகையில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு தேவையான ரேஷன் கோதுமை, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் கொண்டுவரப்படுகிறது.