திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுகவினர் மனுவால் பரபரப்பு

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அதிமுகவினர் சிப்காட்டுக்கு எதிராக மனு கொடுக்க உள்ளதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Update: 2024-06-28 11:16 GMT

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அதிமுகவினர் சிப்காட்டுக்கு எதிராக மனு கொடுக்க உள்ளதால் பதட்டம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் அரசு சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் விவசாயிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விவசாய குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளனர்.

இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News