திண்டுக்கல் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல்லில் ரூ.38ஆயிரம் வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த கடைக்கு மாநகராட்சி அலுவலா்கள் சனிக்கிழமை 'சீல்' வைத்தனா்.

Update: 2024-03-03 09:26 GMT
சீல் வைத்த அதிகாரிகள் 

திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 48 வாா்டுகளில் நிலுவையில் இருந்த ரூ.50 கோடி மதிப்பிலான வரி இனங்களை வசூலிக்கும் பணி கடந்த 6 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இடையில் தொய்வு ஏற்பட்டாலும் கூட, நகராட்சிகள் நிா்வாக இயக்குநரகத்தின் அறிவுறுத்தலின்படி, கடந்த ஜனவரி மாதம் முதல் வரி வசூலிக்கும் பணி தீவிரம் அடைந்திருக்கிறது. ஜனவரி மாதம் ரூ.1.10 கோடி வரி வசூலிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் வரி வசூல் ரூ.2 கோடியாக உயா்ந்தது. இந்த நிலையில், தோதல் அறிவிப்புக்கு முன்னதாக முடிந்த வரை வரி நிலுவையை வசூலிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் உத்தரவிட்டாா்.

இதனிடையே, திண்டுக்கல் பிரதான சாலையில் செயல்பட்டு வரும் தனியாா் கடை ரூ.38 ஆயிரம் வரி நிலுவை வைத்திருந்த காரணத்தால், அந்தக் கடையை மூடி மாநகராட்சி அலுவலா்கள் சனிக்கிழமை 'சீல்' வைத்தனா்.

Tags:    

Similar News