திண்டுக்கல் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்தித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.;
Update: 2024-02-26 18:53 GMT
பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திண்டுக்கல் எம் எஸ் பி பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. திண்டுக்கல் எம் எஸ் பி பள்ளியில் 1977 ஆம் ஆண்டு 11ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்புபள்ளியின் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் முருகேசன், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு சிறப்பு வாய்ந்ததாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. ஒரு இனிய சந்திப்பு தருணம். இதில் மாணவர்கள் தங்கள் படிக்கும்போது ஆசிரியரிடம் அடி வாங்கியதையும், அவர்களிடம் அடி வாங்குவதை தப்பிக்க பாடங்கள் நடத்தும் போது கேள்வி கேட்டு திசை திருப்புவதையும் சுவாரசியமாக எடுத்துக் கூறினர்.