அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி மாணவர் சேர்க்கை

கும்மிடிப்பூண்டி அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி மாணவர் சேர்க்கை நடைப்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-04 14:05 GMT

மாணவர் சேர்க்கை 

கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் அரசினர் ஐ.டி.ஐ., இயங்கி வருகிறது. குளிர்சாதன டெக்னீசியன், மெக்கானிக், சர்வேயர், இன்-ப்ளான்ட் லாஜிஸ்டிக்ஸ் அசிஸ்ட்டன்ட் ஆகிய நான்கு தொழிற் பிரிவுகளில் அங்கு பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி காலத்தில் ஊக்கத்தொகை மட்டுமின்றி மிதிவண்டி, மடிக்கணினி, சீருடை, பாட புத்தகங்கள், வரைபட உபகரணங்கள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும்.

பயிற்சி முடிந்ததும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இந்த கல்வி ஆண்டுக்கான ஆன்லைன் மாணவர் சேர்க்கை, கடந்த ஜூன் மாதம், 30ம் தேதியுடன் முடிவடைந்தது.

காலியாக உள்ள இடங்களுக்கு வரும் 15ம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரம் அறிய 88381 82450, 94447 14597, ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Tags:    

Similar News