இயக்குநர் அமீர் இல்ல திருமணம் - திரைத்துறையினர் பங்கேற்பு
மதுரையில் நடந்த இயக்குநர் அமீர் இல்ல திருமண விழாவில் திரைத்துறையினர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.;
Update: 2024-06-24 08:10 GMT
மணமக்களை வாழ்த்திய சினிமா துறையினர்
பிரபல சினிமா இயக்குனரும் நடிகருமான அமீர் இல்ல திருமண விழா மதுரை கருப்பாயூரணி பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இத் திருமண நிகழ்வில் இஸ்லாமிய முறைப்படி அமிரின் மகள் அன் நிஷாவிற்கும் மணமகன் முகமது முஸ்தபாவிற்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர்கள் ஆர்யா, சசிகுமார், சூரி, கஞ்சா கருப்பு, அல் அமீன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேக் நபி மற்றும் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், உற்றார் உறவினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.