மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை; வரும் 10ல் சிறப்பு முகாம்

தூத்துக்குடியில் வரும் 10ம் தேதி மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடக்கிறது.

Update: 2024-02-08 12:50 GMT

தூத்துக்குடியில் வரும் 10ம் தேதி மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடக்கிறது.

மக்களுடன் முதல்வர் என்ற திட்ட முகாமில் மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை வேண்டி விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் 17.12.2023, 18.12.2023 அன்று ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிதிலமடைந்த தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக புதிய மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போட் சைஸ் புகைப்படம் -5 அனைத்து ஆவணங்களுடன் வருகின்ற 10.02.2024 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.

மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தொவித்துள்ளார்.

Tags:    

Similar News