வாக்குச்சாவடி மையங்களுக்கு பொருட்கள் அனுப்பும் பணி - ஆட்சியர் ஆய்வு
குளித்தலை மற்றும் முசிறி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள பொருட்களை முறையாக பிரித்து அனுப்பி வைப்பதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம், பார்வையிட்டு ஆய்வு செய்தார்
Update: 2024-04-17 06:26 GMT
பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட குளித்தலை மற்றும் முசிறி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள பொருட்கள் முறையாக பிரித்து அனுப்பிவைப்பதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியருமான கற்பகம், குளித்தலை மற்றும் முசிறி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அனைத்து பொருட்களும் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். பாராளுமன்றப் பொதுத்தேர்தல் வெளிப்படைத்தன்மையுடனும், அமைதியாகவும் நடைபெற உங்கள் ஒவ்வொருவரின் பணியும் இன்றியமையாதது. என தெரிவித்தார். இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர்கள் தனலட்சுமி, (குளித்தலை), ராஜன்(முசிறி) ஆகியோர் உடனிருந்தனர்.