பிளாஸ்டிக் கழிவுகள் தொழிற்சாலைக்கு அனுப்பி வைப்பு !

சுரண்டையில் குப்பைகளிலிருந்து பிரிக்கப்பட்ட 6600 கிலோ மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் பெயிலிங் முறையில் கட்டப்பட்டு சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2024-03-29 06:06 GMT

சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் 

தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் பெறப்பட்ட குப்பைகளிலிருந்து பிரிக்கப்பட்ட 6600 கிலோ மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் பெயிலிங் முறையில் கட்டப்பட்டு சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆலோசனையின் பேரில் சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான அலுவலர்கள் மினி லாரி மூலம் அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அரசு ஊழியர்களும் மற்றும் தூய்மை பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News