வாக்குச்சாவடிகளுக்கான வாக்கு இயந்திரங்கள் அனுப்பும்பணி !

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி துவங்கியது.

Update: 2024-04-18 09:22 GMT

வாக்கு இயந்திரங்கள் 

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாளை துவங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழ்நாட்டில் நாளை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 1743 வாக்கு சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கட்டுப்பாட்டு கருவிகள் ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி துவங்கியது.

மயிலாடுதுறை மாவட்டத்தை பொருத்தவரை 15 லட்சத்து 45 ஆயிரத்து 568 நபர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் 1743 வாக்கு சாவடிகளில் ஒரு வாக்கு சாவடிக்கு இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வீதம் 3486 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு என்று 4178 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2089 கட்டுப்பாடு இயந்திரங்கள் 2262 ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது.

மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தல் பணியில் 8646 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் 356 துணை ராணுவ படையினரும் 1453 தமிழக காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இன்று மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோட்டாட்சியர் யுரேகா முன்னிலையில் வாக்கு சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

இதேபோல பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 306 வாக்குப்பதிவு மையங்களுக்கு மிண்ணனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News