அரவக்குறிச்சியில் பாலித்தீன் பைகள் பறிமுதல்.
அரவக்குறிச்சியில் பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஒருமுறை பயன்படுத்தும் பாலிதீன் பைகளால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்ப்பட்டு வருகிறது. குப்பை கொட்டுமிடத்தில் இது போன்ற பாலித்தின் பைகளை பொதுமக்கள் போட்டு வருகின்றனர். காற்று, மழை காரணமாக அந்த பைகள் சாக்கடையில் கலந்து பின்னர் கழிவுநீர் கால்வாயை அடைத்துக் கொள்கிறது. மேலும், மண்ணுக்குள் செல்லும் இது போன்ற பாலித்தின் பைகளால், பூமிக்கும் மழை நீருக்கும் உண்டான தொடர்பை துண்டித்து விடுகிறது.
இந்நிலையில், அரவக்குறிச்சி பகுதிகளில் கடைகளில் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் அரவக்குறிச்சி பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இன்று அரவக்குறிச்சி பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது,கடைகளில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். அதேசமயம், அரசு அனுமதித்த அளவிலான மைக்ரான் கொண்டு தயாரிக்கப்பட்ட பாலித்தீன் பைகளை பயன்படுத்தும் கடைக்காரர்களிடம் பைகளை சோதனை செய்து, பிறகு அவர்களிடம் ஒப்படைத்தனர். இதனால், அரவக்குறிச்சி கடைவீதி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.