வாகனம் முந்தி செல்வதில் தகராறு - காவலர் பணியிடை நீக்கம்

பட்டினப்பாக்கத்தில் வாகனத்தை முந்தி செல்வதில் ஏற்பட்ட தகராறில் பாஸ்புட் கடை உரிமையாளரை தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய ஆயுதப்படை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2024-05-05 04:29 GMT

காவல் நிலையம் 

ஓஎம்ஆர் பகுதியில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருபவர் மணிகண்டன். நேற்று பட்டினப்பாக்கம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது முந்தி செல்வதில் ஏற்பட்ட தகராறில் இவரை 4 பேர் சரமாரி தாக்கினர். இதில் ஈடுபட்ட 3 பேரை பட்டினபாக்கம் போலீசார் கைது செய்த நிலையில் ஆயுதப்படை காவலர் கோபிநாத் தாக்குதலில் ஈடுபடாத காரணத்தினால் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News