கிணற்றில் தண்ணீர் எடுப்பது தொடர்பாக தகராறு
சேலம் மாவட்டம், வேலம்பட்டியில் கிணற்றில் தண்ணீர் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராற்றில் ஒருவர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-03-28 15:49 GMT
தகராறு
சேலம் மாவட்டம், கூட்டாத்துப்பட்டி வேலம்பட்டி உப்பு ஓடைபகுதியை சேர்ந்தவர் கரியப்பன் (47), தொழிலாளி. இவருக்கு, அண்ணன் பொன்ராஜ் என்பவருடன் பொது கிணற்றில் தண்ணீர் பயன்படுத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 25ம் தேதி கரியப்பன் வீட்டுக்கு பொன்ராஜ் மற்றும் அவரது மனைவி விஜியா ஆகியோர் சென்று தகராறு செய்தனர்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பொன்ராஜ், விஜியா ஆகியோர் அருகில் கிடந்த கட்டையை எடுத்து கரியப்பனை சரமாரி தாக்கினர். இதில் காயம் அடைந்த கரியப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.