தஞ்சையில் பெண் காவலரிடம் தகராறு: மூன்று பேர் கைது

தஞ்சையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் தகராறு செய்து, சாலை மறியலில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-01-08 09:47 GMT
கோப்பு படம் 

தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே, சனிக்கிழமை இரவு பொது இடத்தில் மூன்று நபர்கள் அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த பெண் காவலர் பொதுவெளியில் மது அருந்தக்கூடாது உடனடியாக புறப்பட்டு செல்லுங்கள் என கண்டித்துள்ளார்.

ஆனால் அதற்கு அந்த மூன்று பேரும் அந்த பெண் காவலரிடம் தகராறு செய்து அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.  இது குறித்து மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் சந்திரா மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று நபர்களை கைது செய்ய முற்பட்டனர்.

அப்போது மூன்று நபர்களும் தஞ்சை ரயில் நிலையத்தில் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து காவல்துறையினர் மூன்று பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் கொண்டிராஜப்பாளையத்தை சேர்ந்த குபேந்திரன், டவுன் கரம்பை சேர்ந்த முத்தமிழ் செல்வன், ரயிலடியை சேர்ந்த ரவி என்பது தெரிய வந்தது.

இதில் குபேந்திரன் இந்து முன்னணி மாவட்ட அமைப்பின் மாவட்ட செயலாளராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News