மன உளைச்சலில் திருமணமான வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த புலிவலம் அருகே பெரிய காட்டுக்குளத்தில் குடும்ப பிரச்சினை காரணத்தினால் மன உளைச்சலில் திருமணமான வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-03-23 06:15 GMT

காவல்துறை விசாரணை


திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா பெரிய காட்டுக்குளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் 30 வயதான திருப்பதி. இவர் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். சமீபத்தில் இவருக்கு வேலை இல்லை என கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்த்து கடந்த சில மாதங்களாக திருப்பதி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த புலிவலம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து புலிவலம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News