சத்துணவு மையங்களுக்கு சமையல் பாத்திரங்கள் விநியோகம்

வெம்பாக்கத்தில் உள்ள சத்துணவு மையங்களுக்கு ஒன்றிய குழு தலைவர் டி ராஜு சமையல் பாத்திரங்கள் விநியோகம் செய்தார்.

Update: 2024-02-25 13:09 GMT

சமையல் பாத்திரம் வழங்கல் 

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் இயங்கும் சத்துணவு மையங்களுக்கு சமையல் பாத்திரங்கள் விநியோகம் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் டி ராஜி கலந்து கொண்டு சத்துணவு மையப் பொறுப்பாளர்களிடம் சமையல் பாத்திரங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தென்னரசு வெங்கட்ராமன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News