400சாதுக்களுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கல்
திருவண்ணாமலை திருவண்ணாமலை கிரிவல பாதையில் இயங்கி வரும் சிவனடியார் சாதுக்கள் சேவா அறக்கட்டளை நிறுவனர் நாகராஜன் பரதேசி இவரது தலைமையில். கிரிவலப் பாதையில் உள்ள 400க்கு மேற்பட்ட சாதுக்களுக்கு. தீபாவளி முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் அவர்களது தினமும் பயன்படுத்தக்கூடிய வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மேலும் சிவனடியார் சாதுக்கள் சேவா அறக்கட்டளை நிறுவனர் நாகராஜன் பரதேசி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில். இந்த கிரிவல பாதையில் இயங்கி வரும் ஆதரவற்ற சாதுக்களுக்கு பொங்கல், தீபாவளி. விநாயகர்சதுர்த்தி, ஆயுத பூஜை உள்ளிட்ட இந்துக்கள் கொண்டாட கூடிய அனைத்தும் பண்டிகைகளுக்கும்,புத்தாடையும் மற்றும் அவர்களது தினந்தோறும் பயன்படுத்தக்கூடிய வாழ்வாதார உபகரணங்கள் எங்களது சேவா அறக்கட்டளை சார்பில் வழங்கி வருகிறோம்.
மேலும் சாதுகளுக்கு தினந்தோறும் இலவசமாக மருத்துவ சிகிச்சை ஏற்பாடு செய்து வருகிறோம் .இதனை தொடர்ந்து சாதுக்களுக்கு காலை உணவு மற்றும் மாலை நேரத்தில் அவர்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பால் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறோம். பின்னர் இந்த சேவையினை நானும் ஒரு காலத்தில் சாதுக்காக இருந்து வந்தவர் தான் அதனால் சாதுக்களுக்கு சேவை செய்வது என்னுடைய சேவையாக கொண்டு வருகிறேன் . இந்த சேவை சாதுக்களுக்கு மட்டுமே, காலந்தோறும் என்னுடைய சேவையை நான் செய்து கொள்வேன் என்றும் பின்னர் நான் இல்லாத போதிலும் இந்த சேவையை தொடங்குவதற்கு என்னை போன்ற சாதுக்களை நான் உருவாக்கி விட்டு தான் செல்வேன் என்று இவ்வாறு அவர் கூறினார்.