சிவகங்கையில் காவலர்களுக்கு உணவுகள் வழங்கல்
சிவகங்கையில் காவலர்களுக்கு உணவு பற்றாக்குறை என செய்தி வெளியான நிலையில் கூடுதல் உணவுகள் வழங்கப்பட்டன.
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களுக்கான வேட்பு மனு தாக்கல் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதி முழுவதும் சுமார் 90க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் மூலம் நேற்று மதிய உணவு அளிக்கப்பட்டது. அதில் குடிக்க தண்ணீர் கூட வழங்காமல் 300 கிராம் அளவில் தயிர் சாதம் மட்டும் விநியோகிக்கப்பட்டது. இது காவலர்களுக்கு போதுமானதாக இல்லாத நிலையில் காவலர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்.
இந்நிலையில் இது குறித்து செய்திகள் வெளியானது. இதனை தொடர்ந்து செய்தியின் எதிரொலியாக இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு தண்ணீர் பாட்டிலுடன் கூடுதலாக லெமன் சாதமும் வழங்கப்பட்டது. இதனால் காவலர்கள் மன ஆறுதல் அடைந்தனர்.