ஜமாத்துல் உலமா சபை சார்பில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேவையான நோட்புக் மற்றும் பேனா உள்ளிட்ட ஒன்றரை லட்சம் மதிப்பிலான பொருள்களை நெல்லை ஜமாஅத் உலமா சபை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

Update: 2024-01-07 15:11 GMT

நோட்டு புத்தகம் வழங்கல் 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 17, 18 ஆகிய இரு தினங்கள் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் வீடுகளுக்குள் மழை வெள்ளம் சென்றதால் பள்ளி மாணவ மாணவிகள் புத்தகம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சேதமடைந்தது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு ஜமாத் உலமா சபை சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நெல்லை ஜமாஅத் உலமா சபை சார்பில் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் எஸ்.எஸ். சேக் மீரான் ஏற்பாட்டில் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 5000 கிங் சைஸ் நோட்டுகள்,

2500 பேனாக்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ வழங்குவதற்காக வேண்டி தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி முஜிபுர் ரஹ்மான் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி யிடம் வழங்கினார். அப்போது திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் எஸ்.எஸ். சேக் மீரான், தூத்துக்குடி மாநகர ஜமாத்துல் உலமா தலைவர் இம்தாதுல்லாஹ் பாகவி,

அம்பை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் முபாரக் அஹமது, பொருளாளர் ஜாஹிர் ஹுசைன், தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் இமாம் அப்துல் அழிம், சதக்கத்துல்லாஹ், ஆகியோர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News