கண் கருவிழி பதிவு மூலம் ரேஷன் விநியோகம்
ஒட்டன்சத்திரம் பகுதி ரேஷன் கடைகளில் சோதனை அடிப்படையில் கண் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
Update: 2023-12-06 10:48 GMT
ஒட்டன்சத்திரம் பகுதி 30 ரேஷன் கடைகளில் சோதனை அடிப்படையில் கண் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்த முறையில் கைரேகை ஸ்கேன் ஆகாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் கண் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருந்தார். அதன்படி ஒட்டன்சத்திரம் பகுதிகளில் உள்ள 30 ரேஷன் கடைகளில் சோதனை அடிப்படையில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும் முறை தொடங்கப்பட்டது.