ரமலான் தொழுகைக்கு வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்
பேராவூரணி ஜமாலியா பள்ளிவாசலில் நடந்த ரமலான் சிறப்பு தொழுகைக்கு வந்த இஸ்லாமியர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஜமாலியா பள்ளிவாசலில் ஈகைத் திருநாளையொட்டி (ரமலான்)ஈதுல் பெருநாள் சிறப்புத் தொழுகை வியாழக்கிழமை நடைபெற்றது. இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையை தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை கொண்டாடினர். பேராவூரணி ஜூம்ஆ பள்ளிவாசலில் ஆண்களுக்கு காலை 9 மணிக்கு நடைபெற்ற சிறப்பு தொழுகையில் 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இமாம் சேக் அப்துல்லா ஃபைஜி தொழுகை நடத்தினார். அதனை தொடர்ந்து பெண்களுக்கு நடைபெற்ற சிறப்பு தொழுகையை தலைமை இமாம் ஜெய்னுதீன் ஆலீம் நடத்தினார் .
தொழுகை முடித்து சென்ற இஸ்லாமியர்களுக்கு தன்னார்வலர்கள் அமைப்பு சார்பில் சமூக ஆர்வலர் சதீஷ்குமார் தலைமையில் சப் காவல் உதவி ஆய்வாளர் புகழேந்தி மரக்கன்றுகள் வழங்கினார். பழக்கன்று வழங்கும் நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் மகேந்திரன், மூர்த்தி, செந்தில், முருகேஷ், ரமேஷ், ஆனந்ந்தராஜ், வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .