அருப்புக்கோட்டையில் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கல்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கட்சிக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.;

Update: 2024-03-01 12:52 GMT
அன்னதானம் வழங்கல்

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில் அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய திமுக மற்றும் தெற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இதில் திமுகவினர் திமுக கட்சி கொடி ஏற்றி பொது மக்களுக்கு இணைப்புகள் வழங்கினார் அதனைத் தொடர்ந்து. அவித்த முட்டையுடன் சீரகச் சம்பா அரிசியில் மணக்க மணக்க செய்யப்பட்ட சிக்கன் பிரியாணி லெக் பீஸ் உடன் பொதுமக்களுக்கு திமுகவினர் அன்னதானமாக வழங்கினர். ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று காத்திருந்து சுடச்சுட பிரியாணியை வாங்கிச் சென்று சுவைத்தனர்.

Advertisement

அதேபோல அருப்புக்கோட்டை நகர திமுக சார்பில் சொக்கலிங்கபுரம் சொக்கநாதர் கோவிலில் பொதுமக்களுக்கு சைவ விருந்து வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து வள்ளலார் திருக்கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு அன்னதானமும், மேலும் வாழ்வாங்கியில் முதியோர் இல்லம் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று அங்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

அதேபோல சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆதரவற்ற மாணவர்களுக்கு பிரியாணியும், ஏழை தாய்மார்களுக்கு சேலையும் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய நகர மாவட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News