பட்டாசு கடைகளில் மாவட்ட ஆட்சியர் இரவில் திடீர் ஆய்வு
பட்டாசு கடைகளில் மாவட்ட ஆட்சியர் இரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;
By : King 24x7 Website
Update: 2023-10-26 03:50 GMT
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மயிலாடுதுறை நகரில் பட்டாசு கடைகளில் இரவில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனை சூடு பிடித்த நிலையில் மயிலாடுதுறை நகரில் ஓரிடத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் அமைந்துள்ள பெரிய கடைத்தெருவில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். பட்டாசுகடைகளில் மணல், தண்ணீர், தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து கடைகளின் உள்ளே சென்று ஆய்வுசெய்தார். அரசின் நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினார். மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வரும் 6 பட்டாசு தயாரிப்பு நிறுவனங்களில், விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்ட ஒரு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும், மாவட்டத்தில் செயல்படும் சிலரை பட்டாசு கடைகள் அரசின் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.