அனைத்து கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

சிவகங்கையில் தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக அனைத்து கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.

Update: 2024-03-19 11:09 GMT

சிவகங்கையில் தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக அனைத்து கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதையொட்டி, சிவகங்கை மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பான விதிமுறைகளை அங்கீகரிகப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் அனைவரும் முறையாக கடைபிடிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆஷா தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் பெற வேண்டிய அனுமதிகள் ஆகியன தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தினால் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, அரசு கட்டிடங்கள் மற்றும் தனியார் கட்டிடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரங்கள், கொடிக்கம்பங்கள், சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள், ப்ளக்ஸ் ஆகியவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து அரசியல் கட்சியினர் தங்களது பொதுக் கூட்டங்கள், தெரு முனைக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் பிரச்சாரங்களுக்கென அனைத்து வகையான அனுமதியினை SUVIDHA என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து, அதற்கான அனுமதிகளை பெற்றுக் கொள்ளலாம். உரிய அனுமதி பெற்றபின் மட்டுமே கட்சிக் கூட்டங்கள் நடத்திட வேண்டும். தேர்தல் தொடர்பான ஒவ்வொரு வகையான பிரச்சாரங்களுக்கும் உரிய அனுமதி பெற வேண்டும். காவல் துறையின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கூட்டங்கள் நடத்திட வேண்டும்.

இதுமட்டுமன்றி, வேறு இடங்கள் தொடர்பாக முறையாக தெரிவிக்கப்படின், அவ்விடங்கள் விதிமுறைக்கு உட்பட்டு இருப்பின் அவைகளும் பரிசீலிக்கப்படும். தேர்தல் பிரச்சார நேரங்களான காலை 06.00 முதல் இரவு 10.00 மணி வரை மட்டுமே ஒலிப்பெருக்கியினை பயன்படுத்த வேண்டும். மேலும், மாவட்டத்தில் நடத்தப்படும் திருமண உள்ளிட்ட பிற தனியார் நிகழ்ச்சிகளில் விளம்பர பலகை வைப்பதற்கும் உரிய அனுமதி பெற வேண்டும், தனி நபர் ரூ.50,000 த்திற்கு மேல் ரொக்கத்தொகையாக எடுத்துச் செல்ல வேண்டும் எனில் அதற்குரிய ஆவணமும் வைத்திருத்தல் வேண்டும் என தெரிவித்தார்

Tags:    

Similar News