மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

மணவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா பாடப் புத்தகங்கள் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார்.

Update: 2024-06-14 05:57 GMT

 அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணாக்கர்களுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் நடப்பு கல்வி ஆண்டில் பயிலும் மாணவர்கள் பள்ளி திறந்த நாளிலேயே பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மணவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணாக்கர்களுக்கு புத்தகங்களை வழங்கி துவக்கி வைத்தார்.

இதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் அரசு அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், 751 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிகளில் யுகேஜி, எல்கேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 38,812 மாணவ- மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags:    

Similar News