தபால் வாக்குப்பதிவு குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு....
சிவகங்கை அருகே தபால் வாக்குப்பதிவு குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-06 07:10 GMT
தபால் வாக்குப்பதிவு
சிவகங்கை மாவட்டம், பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024ஐ முன்னிட்டு, 85 வயதைக் கடந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இருப்பிட முகவரிக்கே சென்று, அஞ்சல் வாக்கு பதிவு மேற்கொள்ளும் பணிகள் தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்றையதினம் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காஞ்சிரங்கால் ஊராட்சி பகுதியில் நேரில் பார்வையிட்டார். உடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (சிவகங்கை) விஜயகுமார், சிவகங்கை வட்டாட்சியர் சிவராமன் உட்பட பலர் உடனிருந்தனர்.