நாமக்கல்லில் புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகள் மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு.

நாமக்கல்லில் புத்தக திருவிழா நடைபெறும் இடத்தை அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்க்கொள்ளும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா.

Update: 2024-01-20 11:38 GMT
நாமக்கல்லில் புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகள் மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு. நாமக்கல் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் (தெற்கு) நடைபெறவுள்ள புத்தக திருவிழா-2024-யை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் புத்தக திருவிழா வருகின்ற 26.01.2024 (வெள்ளிக்கிழமை) அன்று தொடங்கி 02.02.2024 (வெள்ளிக்கிழமை) அன்று வரை நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் (தெற்கு) நடைபெறவுள்ளது. புத்தக திருவிழாவில் அரசுத்துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை விளக்கும் அரங்குகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், போட்டி தேர்வர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு புகழ்பெற்ற நூல் ஆசிரியர்கள் எழுதிய புத்தகங்கள், அறிவியல், வரலாறு, ஆராய்ச்சிகள், கதைகள், நாவல்கள் என பல்வேறு வகையான நூல்கள் அடங்கிய 80-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. மேலும், புத்தக திருவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள், பேச்சுப்போட்டிகள், கிராமிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள், சிறந்த பேச்சாளர்களின் கருத்தரங்குகள் நடைபெறவுள்ளது. இந்த ஆய்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மா.க.சரவணன், முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, நாமக்கல் நகராட்சி ஆணையர் சென்னு கிருஷ்ணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வார் பாதுகாப்பு அலுவலர் த.முத்துராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) த.மாதவன் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News