100%விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியார்
கிருஷ்ணகிரியில் 100%விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியார்.
Update: 2024-04-08 09:07 GMT
கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் -2024 நடைபெறுவதை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், 100 சதவிகிதம் வாக்கு பதிவு அவசியம் குறித்து, மாவட்ட நிர்வாகம்,மற்றும் டாக்டர் மூனீஸ் சாரிடபுள் டிரஸ்ட் சார்பாக சுமார் 2500 நபர்கள் பங்கு பெற்ற விழிப்புணர்வு நடைபேரணியை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை,கூடுதல் ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வந்தனா கர்க் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.