குடிநீர் விநியோகம் குறித்து அதிகரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக் கூட்டம்

தர்மபுரி மாவட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்களுடன் குடிநீர் விநியோகம் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-04-25 13:29 GMT

ஆய்வு கூட்டம் 

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் பேரூராட்சி மற்றும் நகராட்சி ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் ஏப்ரல் 25 வியாழக்கிழமை இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, பேரூராட்சி மற்றும் நகராட்சி ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் குறித்து எவ்வித புகார் இல்லாமல் சீராக வழங்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், குடிநீரை முறையாக பயன்படுத்தவும் குடிநீர் வீணாவதை தடுக்கவும் ஒரே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

குடிநீர் வீணாவதை தடுக்க நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்களும் ஆய்வுக் கூட்டம் நடத்தி குடிநீர் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். முறையற்ற குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து துண்டித்திடவும், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் குடிநீர் தட்டுப்பாட்டை உடனுக்குடன் சரி செய்ய பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வரன் நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி பேரூராட்சி செயல் அலுவலர்கள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News