பதட்டமான வாக்குசாவடிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு

பதட்டமான வாக்குசாவடிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி பிருந்தா தேவி பார்வையிட்டு ஆய்வு

Update: 2024-04-14 15:44 GMT

மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு

சேலம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 89 பதற்றமான வாக்குச்சாவடிகளும், மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 146 பதற்றமான வாக்குச்சாவடிகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகள் அனைத்திலும் சிசிடிவி கேமரா மூலம் மாநில தேர்தல் ஆணையர் அலுவலகம் மற்றும் மாவட்ட தேர்தல் பொதுப்பார்வையாளர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இவ்வாக்குச்சாவடிகள் அனைத்தையும் நேரடியாக கண்காணிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் நுண் பார்வையாளர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும்படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சேலம் மக்களவை தொகுதிக்குட்பட்ட மல்லமூப்பம்பட்டி இராமலிங்க வள்ளலார் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தினையும், சூரமங்கலம் நீலாம்பாள் சுப்ரமணியம் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்கள் உள்ளிட்ட பதற்றமான வாக்குச்சாவடிகள் அனைத்தையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு குடிநீர் வசதி, சுகாதார வசதி மற்றும் சாய்வு தளம் உள்ளிட்ட தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
Tags:    

Similar News