திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் மாவட்ட அளவிலான மாதிரி இளையோர் நாடாளுமன்றம் !

திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் மாவட்ட அளவிலான மாதிரி இளையோர் நாடாளுமன்றம் நடைபெற்றது

Update: 2024-03-06 10:20 GMT

திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறை மற்றும் நாமக்கல் நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பில் மாவட்ட அளவிலான மாதிரி இளையோர் நாடாளுமன்றம் நடைபெற்றது. இவ்விழாவில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலாளர்முனைவர் திரு.மு.கருணாநிதி அவர்கள் குத்து விளக்கேற்றி நிகழ்வினைத் தொடங்கி வைத்து தலைமை தாங்கினார். விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர் மற்றும் நிர்வாக இயக்குநர் முனைவர் குப்புசாமி , விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாகி சொக்கலிங்கம் ,ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் பாலகுருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரியின் அரசியல் அறிவியல் துறை இரண்டாமாண்டு மாணவி கர்ணிகா வரவேற்புரை வழங்கினார்.

கல்லூரியின் முதல்வர் முனைவர் பேபிஷகிலா சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தி அறிமுக உரையாற்றினார். நாடாளுமன்ற செயல்முறைகள் குறித்து நாமக்கல் நேரு யுவகேந்திரா மாவட்ட அலுவலர் சரண் கோபால் உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாமக்கல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் A.K.P. சின்ராஜ் பேசுகையில் ஒவ்வொருவரும் எவ்விதமான கவர்ச்சிகரமான வெகுமதிகளுக்கு இடம் கொடுக்காமல் தங்களது வாக்குகளை முறையாக செலுத்தி ஜனநாயகத்தை கட்டமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த மாவட்ட அளவிலான மாதிரி இளையோர் நாடாளுமன்றத்தில் மாணவிகள் குடியரசு தலைவர், பிரதமர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் என அரங்கம் நிறைந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் இடம் பெற்றன. இதில் குடியரசு தலைவர் தலைமையில் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றல், கேள்வி நேரம், புதிய மசோதாக்கள் நிறைவேற்றுதல் என பாராளுமன்ற மரபுகளை பின்பற்றி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

ஒவ்வொரு துறை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் வினா எழுப்பியும் விடை கூறியும் பாராளுமன்ற நிகழ்வுகளை கல்லூரி அரசியல் அறிவியல் துறை மாணவிகள் நிகழ்த்திக் காட்டினர்.மாணவிகள் ஒவ்வொருவரும் பாராளுமன்ற நடவடிக்கைகளை முழுமையாக அறிந்து கொள்ள இந்த பாராளுமன்றம் வழிவகை செய்தது. இன்றைய இளம் தலைமுறையினர் அரசியல் துறையிலும் தங்கள் பங்களிப்பை செலுத்திட இது போன்ற மாதிரி பாராளுமன்றங்கள் அடித்தளம் அமைக்கின்றது என அவர் பாராட்டினார். மேலும் மற்றும் தன் அரசியல் வாழ்க்கை போன்றவற்றை கல்லூரி மாணவிகளுக்கு சிறப்புரை வழங்கி அரசியலுக்கு மாணவிகள் வந்து பதவியேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்தப் பாராளுமன்றத்தில் கல்லூரி மாணவிகள் 160 பேர் உறுப்பினராக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார். இந்த இளைஞர் பாராளுமன்ற நிகழ்வில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவில் கல்லூரி துணை முதல்வர் முனைவர் மேனகா , துறைத்தலைவர் முனைவர் பிரபு, பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக நாமக்கல் நேருயுவகேந்திரா அமைப்பின் மாவட்ட அலுவலர் வள்ளுவன் நன்றியுரை கூறினார். விழா ஏற்பாட்டினை பேராசிரியர் த ஸ்ரீதர்ராஜா ஏற்பாடு செய்திருந்தார்.

Tags:    

Similar News