அஞ்சல் வாக்கு செலுத்தும் கடைசி நாள் - மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் ஆய்வு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தபால் வாக்கு செலுத்தும் கடைசி நாள் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
Update: 2024-04-17 01:27 GMT
தபால் வாக்குகள் செலுத்தும் பணி
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தில் (Facilitation Centre) அஞ்சல் வாக்கு செலுத்தும் கடைசி நாளான அலுவலர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் துணை ஆட்சியர்/கலால் மேற்பார்வையாளர் ஜெகதீசன் உட்பட பலர் உள்ளனர்.