பயன்பாட்டிற்கு வராத நிலையில் உள்ள எரிவாயு தகன மேடை

கருங்குழி பேரூராட்சி, அச்சிறுபாக்கம் பேரூராட்சிகளில் பயன்பாட்டிற்கு வராத நிலையில் உள்ள எரிவாயு தகன மேடைகள்

Update: 2024-02-20 12:36 GMT

எரிவாயு தகன மேடை

செங்கல்பட்டு மாவட்டம்,கருங்குழி, அச்சிறுபாக்கம் பேரூராட்சிகளில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2022- - 23ம் ஆண்டில், தலா 1.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன. கட்டுமானப் பணிகள் முடிந்து ஆறு மாதங்களாகியும் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார் கூறியதாவது: கருங்குழி பேரூராட்சி, அச்சிறுபாக்கம் பேரூராட்சிகளில் நவீன எரிவாயு தகன மேடைக்கான கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. உடல்களை எரிக்கும் போது, காற்றில் பரவும் புகையின் நச்சுத் தன்மையின் அளவை கண்டறிந்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சான்று பெற வேண்டும். இதற்கான பரிசோதனைக்காக, அடையாளம் காணப்படாத கேட்பாரற்ற உடலுக்காக, கடந்த ஆறு மாதங்களுக்கு முன், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொடர்ந்து கடிதம் எழுதி, வலியுறுத்தி வருகிறோம். மேலும், கருங்குழி பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், உறவினர்களின் அனுமதியுடன் உடல்களை பெற்று, எரியூட்டி, நச்சுப் புகையின் தரம் அறிவதற்கான பரிசோதனை செய்ய, கவுன்சிலர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
Tags:    

Similar News