சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் கோட்ட பொதுமேலாளர் திடீர் ஆய்வு

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்ட பணிகளை ரயில்வே கோட்ட பொது மேலாளர் திடீர் ஆய்வு செய்தார்.

Update: 2024-03-10 10:33 GMT

பணிகளை ஆய்வு செய்த கோட்ட மேலாளர்

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்ய வந்தார். இந்த ரெயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை அவர் ஆய்வு செய்தார்.

இதையொட்டி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் நுழைவு வாயிலில் நடக்கும் முகப்பு தோற்ற மாற்றம் மற்றும் பஸ்கள் வந்து செல்லும் பகுதி, பயணிகள் நடை மேம்பால பணி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து 1-வது நடைமேடையில் மற்றும் சுரங்க பாதையில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை பார்வையிட்டார்.

அப்போது அவர், கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்கா, தலைமை திட்ட மேலாளர் அனில் குமார் பாஞ்சியா உள்ளிட்ட அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிப்பது குறித்து ஆலோசனை வழங்கினார். இதனையடுத்து ஈரோடு மற்றும் போத்தனூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது சேலம் ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம், கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் கார்த்திகேயன், ரெயில்வே பாதுகாப்பு படை உதவி கமிஷனர் செங்கப்பா மற்றும் ரயில்வே அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News