துளசி கூட வாசம் மாறும் தவசி புள்ள வார்த்தை மாற மாட்டேன் - விஜய பிரபாகரன்
துளசி கூட வாசம் மாறும், தவசி புள்ள வார்த்தை மாற மாட்டேன் என தனது தந்தை விஜயகாந்தின் திரைப்பட வசனத்தை கூறி விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் விஜய பிரபாகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாண்டியன் நகர் பகுதியில் அதிமுக கூட்டணி கட்சி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் ஆதரவுக்காக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
தேமுதிக வேட்பாளரும் விஜய பிரபாகரன் பேசுகையில், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் ஆகிய மும்மூர்த்திகளின் ஆசியுடன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிடுவதாகவும், காமராஜர் இந்த மண்ணில் பிறந்து எப்படி சிறந்த அரசியல்வாதியாக மாறினாரோ அதேபோல் இந்த மண்ணில் பிறந்த விஜயகாந்த் அவர்களின் மகனாகிய நானும் இந்த தொகுதியில் போட்டியிட வந்திருப்பதாகவும் மறைந்த தந்தை விஜயகாந்த் தன்னை விருதுநகர் பாராளுமன்ற தொகுதி மக்களிடம் ஒப்படைத்து விட்டதாகவும் இந்த தொகுதி மக்கள் தான் இனி தனக்குத் தாய், சகோதரியாக இருப்பார்கள் என பேசினார்
துளசி கூட வாசமாறும் தவசி புள்ள வார்த்தை மாற மாட்டான் பாராளுமன்ற தொகுதியில் உள்ள பிரச்சனைகளை முன்னாள் அமைச்சர் கே ராஜேந்திர பாலாஜி தன்னிடம் கூறி இருப்பதாகவும் புதிய பேருந்து நிலையம் நீண்ட நாட்களாக செயல்படாமல் இருப்பதாகவும் பாதாள சாக்கடை பிரச்சனை விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் நீண்ட நாட்களாக நிறைவு வருவதாக முன்னாள் அமைச்சர் கூறியுள்ளதாகவும் இந்த அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க விருதுநகர் பாராளுமன்ற தொகுதி மக்கள் தன்னை தேர்வு செய்து நாடாளுமன்ற உறுப்பினராக அனுப்பினால் உங்களுடைய குரலாக என்னுடைய குரல் அங்கு ஒலிக்கும் என ஆணித்தனமாக கூறினார். எம்ஜிஆர் மற்றொருவர் கருப்பு எம்ஜிஆர் இருவரும் பொது மக்களுக்கு உணவளித்தவர்கள் இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும் எனவும் வேட்பாளர் விஜய பிரபாகரன் பேசினார்